ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வரும் ஒரு நேரமாகும். இந்த நேரத்தில் சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது என்று கருதப்படுகிறது. இருப்பினும், ராகு காலத்தில் துர்கையை வழிபடுவது தோஷங்களைப் போக்கக்கூடிய ஒரு பரிகாரமாகக் கருதப்படுகிறது.
ராகுவின் அதிதேவதை:
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளது போல, ராகு கிரகத்திற்கு துர்கை அம்மன் அதிதேவதையாக வணங்கப்படுகிறார். அதனால் ராகுவின் தீய பலன்கள் நீங்கவும், துன்பங்கள் விலகவும் ராகு காலத்தில் துர்கை வழிபாடு செய்யப்படுகிறது.
ராகுகால துர்கா பூஜையின் பலன்கள்:
• ராகு, தோஷங்களிலிருந்து விடுபடலாம்.
• திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்கள் திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும்.
• குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்.
• செல்வம் பெருகும், தொழில் விருத்தி அடையும்.
• தொழில், வேலை போன்றவற்றில் உள்ள எதிர்ப்புகள் விலகும், காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
ராகுகால துர்கா பூசை செய்ய ஏற்ற கிழமை அங்காரகன் (செவ்வாய் கிரகம்) துர்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டு முழு பலனை அடைந்ததால், செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில்துர்க்கையை வழிபடுவது மிகவும்சிறந்தது. வெள்ளி மற்றும் ஞாயிறும் ராகு கால துர்கா பூசைக்கு சிறந்த நாள்களாகும்.
ராகுகால துர்கா பூசைக்கு ஏற்ற மலர்கள் செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்கள் உகந்தவை. மேலும், மல்லிகை போன்ற மலர்களையும் எலுமிச்சை மாலையையும் அணிவிக்கலாம்.
ராகு நிவர்த்தி துர்கை வழிபாட்டு மந்திரம் :
ஓம் காத்யாயனாய வித்மஹே, கன்யாகுமரி தீமஹி, தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்