Follow Us:
Welcome to Sri Mariamman Temple Kuantan
Call Us: 09-5142069

History

Know About Our Temple History

‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது பழமொழி. இதற்கு ஏற்ப, ஜாலான் கெழுந்திங்கில் உள்ள பொதுப்பணித் துறை ஊழியர்களின் (PWD) குடியிருப்புகளில் வாழ்ந்த மக்கள், முழு நம்பிக்கையுடன், 1928ஆம் ஆண்டு இந்தச் சிறிய ஆலயத்தை நிறுவினர் என்பது செவிவழிக் கதையாகக் கூறப்படுகின்றது.
Know About Our Temple History

அப்போதைய அந்தக் கோவில் அமைந்த இடம், இன்றைய கோவில் கட்டப்பட்ட அதே இடமாகவே இருந்தது. ஆனால், காலப்போக்கில் கோவில் விரிவாக்கப்பட வேண்டிய அவசியம் இருந்தால், இவ்வாலயம் இடம் மாற்றப்பட்டது. 1960ஆம் ஆண்டுகளில், ஆலய உறுப்பினர்கள், நிலையான மற்றும் பெரிய கோவிலுக்கான தேவையை உணர்ந்தனர். இந்த நோக்கத்தை அடைய, அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் தொடக்கத்திலும் ஆலய நிர்வாகம், கோவில் கட்டிடத்திற்கான சிறப்பு நிதியை உருவாக்கின. அவர்களின் அயராத முயற்சியால், மொத்தம் ரிங்கிட் 8,690.00 திரட்டப்பட்டு, புதிய மாரியம்மன் கோவில் கட்டிட நிதிக் கணக்கில் சேர்க்கப்பட்டது.


பல்வேறு மத்திய அரசுத்துறைகள் மற்றும் மாநில அரசின் பங்களிப்பு இங்கு மிகத் தாழ்மையுடன் நினைவுக்கூறப்படுகிறது. மாநில மேம்பாட்டு அலுவலகம் (Pejabat Kemajuan Negeri), குவாந்தான் இந்துக்களுக்கு ரிங்கிட் 80,000.00 நிதியை வழங்கியது. மாநில அரசு நிலத்தை வழங்கி, உறுதியான ஆதரவளித்தது. அந்த நிலத்தின் மீதுதான், இன்றைய கோவில் அமைந்துள்ளது.


தற்போதுள்ள கோவில் வளாகத்தில், கோவில், இரண்டு பன்முக பயன்பாட்டு மண்டபங்கள், குருக்களுக்கான இல்லங்கள், கோவில் அலுவலகங்கள், இசைக்கலைஞர்களுக்கான குடியிருப்புகள், இளைஞர் மன்ற அலுவலகம் மற்றும் கூட்ட அரங்கம், ஒரு நவீன சமையலறை, விருந்தினர் அறை மற்றும் கிடங்கு ஆகியவை உள்ளன. இந்த மாற்றத்திற்குச் சுமார் ரிங்கிட் 600,000.00 செலவானது.


தன்னார்வத் தொண்டர்களின் உதவி இல்லாமல் போயிருந்தால், இந்த செலவுகள் இன்னும் அதிகமாகியிருக்கும் என்பதை குறிப்பாகச் சொல்ல வேண்டும். அவர்களுள் இராணுவம், வான்படை மற்றும் கெமுந்திங் இளைஞர்களின் தொடர்ச்சியான உழைப்பு பாராட்டத்தக்கதும் குறிப்பிடத்தக்கதுமாகும்.
கட்டிடம் மற்றும் நிதி திரட்டும் குழுக்கள், நன்கொடையாளர்கள் ஆகியோர் வழங்கிய நிதி மற்றும் பொருள் உதவிகளுக்கு ஆலய நிர்வாகம் மனமார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கின்றது.

Know About Our Temple History

Know About Our Temple History